‘கோலி சோடா’ இயக்குநருடன் இணைந்த விஜய் ஆண்டனி!
Monday June-17 2019

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கொலைகாரன்’ மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவுக், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை தொடர்ந்து, போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்று தியா மூவிஸ் நிறுவனங்கள், பிரபல பைனான்சியர் கமல் போராவுடன் இணைந்து ‘இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில், ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

 

இப்படத்திலும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். ‘கோலி சோடா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இப்படத்தை இயக்குகிறார்.

 

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கி, கோவா, டையூ, டாமான் போன்ற கடற்பகுதியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். தற்போது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

தரமான திரைப்படம் தயாரிப்பதோடு, அதை சரியான முறையில் பல்வேறு விளம்பர யுக்திகள் மூலம் மக்களிடம் சேர்ப்பதில் வல்லவரான போஃப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தனஞ்ஜெயன், தியா மூவிஸ் பிரதீப் குமார் ஆகியோருடன் பையான்சியர் கமல் போரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பே தற்போது படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related News

5092

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery