பேய் படங்கள் மூலம் தொடர் வெற்றிகளை பெற்று வரும் ராகவா லாரன்ஸ், தற்போது ‘காஞ்சனா’ படத்தை ‘லட்சுமி பாம்ப்’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதில், ராகவா லாரன்ஸ் நடித்த வேடத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் நடிக்கப் போகும் நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இப்படத்தில் இருந்து திடீரென்று விலகிய ராகவா லாரன்ஸ், தன்னை அவமானப்படுத்தியாதலேயே விலகுவதாக அறிவித்தது அனைவரும் அறிந்தது தான், பிறகு அக்ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் சமாதானப் படுத்தியதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ், மீண்டும் லட்சுமி பாம்ப் படத்தை இயக்க தொடங்கியுள்ளார்.
அதே அமயம், ராகவா லாரன்ஸ் லட்சுமி பாம்ப் படத்தில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணம் ஹீரோயின் தான் என்று கூறப்படுகிறது. அதாவது, லட்சுமி ராயை ஹீரோயினாக போட ராகவா லாரன்ஸ் முடிவு செய்தாராம். ஆனால், தயாரிப்பாளரோ இந்தி சினிமாவில் முன்னணியில் இருக்கும் கியாரா அத்வானியை ஹீரோயினாக போட்டால் படத்திற்கு பிளஸாக இருக்கும் என்று நினைத்து, அவரையே ஹீரோயினாக்கினார். இது லாரன்ஸுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், பொருத்துக் கொண்டு பணியாற்றியவர், ஹீரோயின் அவர் நினைத்ததை சரியாக செய்யாமல் சொதப்பியதோடு, லாரன்ஸை மதிக்காமல் தயாரிப்பாளருக்கே முக்கியத்துவம் கொடுத்தாராம். இதனால் கடுப்பான மாஸ்டர், போஸ்டரை காரணம் காட்டி படத்தில் இருந்து நழுவிக்கொண்டார்.
பிறகு அவரை சமாதனப்படுத்த நினைத்த தயாரிப்பாளர் மாஸ்டரின் மனதை புரிந்துக்கொண்டு ஹீரோயினை சரிக்கட்ட, தற்போது கியாரா அத்வானி, மாஸ்டரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
“அவர் மறுபடியும் இப்படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன். அவரும் அப்படியே சம்மதித்தார். அவரே இப்படத்தை இயக்க மிகச் சிறந்த நபர். ஏனென்றால் அவர் இப்படத்தின் ஒரு பகுதியை இயக்கி முடித்து விட்டார். மீதியை யார் இயக்கினாலும் அது சரியாக இருக்காது.
மேலும் லாரன்ஸ் மாஸ்டர் ஆச்சர்யம் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர். இப்படத்தை தமிழில் அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். மக்களும் படத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆக இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவரது விலை மதிப்பில்லா சொத்து என்று தான் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படி ராகவா லாரன்ஸை புகழ்ந்திருக்கும் கியாரா அத்வானி, தற்போது மாஸ்டரின் மனதையும் புரிந்துக்கொண்டதால், ராகவா லாரன்ஸ் ஹாப்பி மூடுக்கு திரும்பிட்டாராம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...