தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, பல வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் மிக்கவர். அப்படி அவர் நடித்த ‘சீதக்காதி’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. மேலும், விஜய் சேதுபதியின் ரசிகர்கள், இப்படங்களால் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, இதுபோன்ற வித்தியாசமான முயற்சிக்கு சிறிது காலம் ஓய்வு விட்டிருக்கும் விஜய் சேதுபதி, தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் ‘சங்கத்தமிழன்’ படத்தில் நடித்து வருவதோடு, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்திலும் நடித்து வருகிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடித்திருக்கும் ‘சிந்துபாத்’ விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய் சேதுபதி, சிரஞ்சீவியின் ’சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்து ‘உப்பேனா’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்.
கடற்கரை பகுதியை கதைக்களமாக கொண்ட காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் இளம் ஹீரோயின் கிரித்தி ஷெட்டிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். முன்னணி இளம் ஹீரோக்களின் பட்டியலில் இருக்கும் விஜய் சேதுபதி ஹீரோயின் ஒருவருக்கு அப்பாவாக நடிப்பது கோலிவுட்டை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
இருப்பினும், ஹீரோயினுக்கு அப்பா என்பதைவிட, படத்தின் வில்லன் என்ற வேடத்திற்கு தான் விஜய் சேதுபதி முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறாராம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...