10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி அவர் நடித்துள்ள ‘மோகினி’, ‘கர்ஜை’ ஆகிய ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல் விஜய் சேதுபதியுடன் 96, அரவிந்த்சாமியுடன் சதுரங்கவேட்டை 2, நிவின் பாலியுடன் ஒரு மலையாளப் படம் என பிஸியாக நடித்து வரும் திரிஷா, மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகும் இப்படத்தில் அந்த மூன்று ஹீரோக்களாக அஜ்கம்ல், சக்தி வாசு, டேனியல் பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும், இவர்கள் யாரும் திரிஷாவுக்கு ஜோடியில்லையாம்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி திருஞானம் இயக்கும் இப்படத்தில் திரிஷா டாக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். டாக்டராக நடித்தாலும் அவருக்கு அதிரடி சண்டைக்காட்சிகள் இருக்கிறதாம்.
இன்னும் தலைப்பு வைக்கப்டாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...