Latest News :

தேசிய விருது நடிகையுடன் கைகோர்க்கும் சண்முகபாண்டியன்!
Tuesday June-18 2019

’சகாப்தம்’ மற்றும் ‘மதுர வீரன்’ என இரண்டு படங்களில் நடித்துவிட்டு தனது உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்கா பறந்த சண்முகபாண்டியன், தற்போது உடல் எடையை குறைத்து, கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் இருக்கிறார்.

 

இந்த நிலையில், தனது தந்தையின் பேவரைட் ரோலான போலீஸ் வேடத்தில் சண்முகபாண்டியன் நடிக்க இருக்கிறார். போலீஸ் வேடம் என்பது ஒவ்வொரு ஹீரோவுக்கமான கனவு வேடம் என்றாலும், அது இவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்திருப்பது சண்முகபாண்டியனுக்கு தான்.

 

ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் மூலம் ஜி.பூபாலன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் சிவாவிடம் வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

இப்படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக ரோனிகா நடிக்க, வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஏ.வெங்கடேஷ், விஜய் டிவி புகழ் பப்பு, யூடியூப் புகழ் பாரத், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா நாயகனின் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

 

Archana

 

இப்படம் குறித்து இயக்குநர் பூபாலன் கூறுகையில், “போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம். இது ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ணமயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை.” என்றார்.

 

அருண்ராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.ஜெயமோகன் வசனம் எழுத, முரளி கிரிஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, தேவக் கலையை நிர்மாணிக்கிறார். மதன் கார்க்கி, அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுத, சதீஷ் நடனம் அமைக்கிறார். விக்கி சண்டைப்பயிற்சியை கவனிக்க, டான் கார்த்திக் ஆடைகளை வடிவமைக்கிறார்.

 

ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் ஒருவர் விரைவில் வெளியிட உள்ளார்.

Related News

5100

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery