‘தும்பா’ படத்தின் சஸ்பென்ஸான ஜெயம் ரவி!
Tuesday June-18 2019

இந்தியாவின் முதல் மிகப்பெரிய லைவ் ஆக்‌ஷன் அனுபவமாக குறிப்பிடப்படும் தும்பா, ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனா ஆகியோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. மேலும் அனிருத் முதல் சிவகார்த்திகேயன் வரை பிரபலங்களின் குரல்கள் 'தும்பாவின் உலகத்துக்கு' கூடுதல் அழகு சேர்த்திருக்கின்றன. 

 

இந்த நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி கெளரவ வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஆனால், அது என்ன வேடம் என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்ததோடு, அவர் வரும் அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, "இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தை சர்ப்ரைஸாக வைக்க விரும்புகிறோம், அது ஒரு சிறப்பு தோற்றம் தான் என்றாலும் பார்வையாளர்கள் அவர் வரும் காட்சிகளை மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்.

 

ஒரு இயக்குநரின் யோசனை உறுதியாக மற்றும் வலுவானதாக இருக்கும்போது, எல்லாம் மிகச்சரியாக அமைகிறது. நான் ஒரு தயாரிப்பாளராக, இயக்குநர் ஹரிஷ் ராம் எல்.எச், திரைப்படத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்து இப்போது இறுதி வடிவம் வரை படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கி வருவதை பார்க்கிறேன். குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் நிச்சயம் படத்தை ரசிப்பார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார்.

 

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். 

 

வரும் ஜுன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘தும்பா’ வெளிநாடுகளிலும் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளது.

Related News

5102

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery