ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! - சிக்கலில் ‘பிக் பாஸ் 3’
Tuesday June-18 2019

விஜய் டிவியில் வரும் ஜுன் 23 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சிகாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். டிவி பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களை கூட, டிவி முன்பு உட்கார வைத்த பெருமை பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் சேரும்.

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சினிமா மற்றும்  பிற துறை பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் எந்த வித வெளி தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். வாரம் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட இறுதியில் இருப்பவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

 

இந்த 100 நாட்களில் ஒரே வீட்டில் இருக்கும் இவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல், காதல், போட்டி, பொறாமை, சண்டை போன்றவற்றை படம்பிடித்து அதை வித்தியாசமாக எடிட் செய்து, மக்களுக்கு காட்டுவது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.

 

இப்படி இரண்டு கட்டங்களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்திற்காக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், பிக் பாஸ் 3 புதிய சிக்கலில் சிக்கியுள்ளது.

 

ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது, அப்படி தணிக்கை சான்று இல்லாமல் ஒளிபரப்பு செய்யப்பட்டால், அதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும், என்று கோரி வழக்கறிஞர் சுதன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

5104

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery