’நேர்கொண்ட பார்வை’ யின் சாதனையை உடைத்த விஜய் பட அப்டேட்!
Saturday June-22 2019

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகியோரது படங்களைப் போலவே அவர்களது படங்கள் குறித்த தகவல்களுக்காகவும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், படத்தின் டிரைலர், டீசர், பஸ்ட் லுக் போன்றவற்றை மிகப்பெரிய அளவில் டிரெண்டாக்கி பல சாதனைகளை நிகழ்த்தும் அளவுக்கு கொண்டாடுகிறார்கள்.

 

அந்த வகையில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பஸ்ட் லுக் ட்விட்டரில் 18 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்திருந்தனர். இது ஒரு சாதனையாக கருதப்பட்டது.

 

ஆனால், அஜித்தின் அந்த சாதனையை விஜயின் 63 வது படத்தின் அப்டேட் தகவல் அசால்டாக முறியடித்திருக்கிறது.

 

ஆம், விஜயின் 63 வது படமான ‘தளபதி 63’ படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டைடில் வரும் ஜுன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்ற தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வ அதகவலை வெறும் 5 நிமிடத்தில் 18 ஆயிரத்திற்கு அதிகமானோர் ரீட்வீட் செய்திருக்கிறார்கள்.

 

விஜய் படங்களின் டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், தற்போது ‘தளபதி 63’ அப்டேட் தகவல் நிகழ்த்தியிருக்கும் புதிய சாதனையும் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Related News

5110

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery