தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டைடானிக் நடிகர்!
Thursday June-20 2019

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஹாலிவுட் படம் ‘டைடானிக்’. தற்போதும் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் மூன்றாம் இடத்தில் உள்ள இப்படம், உலகம் முழுவதும் 2 பில்லியன் டாலர் வசூல் செய்தது.

 

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான காதல்ப் படமான இப்படத்தின் பிரம்மாண்டமும், படத்தில் இடம்பெறும் கப்பல் விபத்து காட்சியின் பிரம்மாண்டமும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இப்படம் மட்டும் இன்றி இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தற்போதும் மக்களை கவர்ந்த நடிகர்களாகவே இருக்கிறார்கள்.

 

அந்த வகையில், டைடானிக் படத்தில் சிறு வேடத்தில் நடித்தாலும் மக்கள் மனதில் நின்ற வேடத்தில் நடித்த ரான் டோனாச்சி, தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

 

Titanic Movie Actor

 

மாதவன் இயக்கி நடித்து வரும் ‘ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட்’ என்ற படத்தில் தான் ஹாலிவுட் நடிகர் ரான் டோனாச்சி நடிக்கிறார்.

 

விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

Related News

5111

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery