லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் அதிரடி முடிவு! - மகிழ்ச்சியில் திரையுலகினர்
Thursday June-20 2019

நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது இயக்குநராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

 

பல படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ‘அரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகியப் படங்களை தொடர்ந்து தற்போது ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்கியிருப்பதோடு, அப்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் பாதிப்புகளை பின்னணியாக வைத்துக் கொண்டு, காதல் கதை ஒன்றை சொல்லியிருக்கும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகையாகவும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பல வெற்றிகளை பெற்றாலும், இயக்குநராக இருப்பதையே பெருமையாக நினைப்பதாக கூறியிருக்கிறார்.

 

மேலும், ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை தயாரித்தது தனது மிகப்பெரிய சாதனை, இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. இந்த படம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்து ஒரு பைசா கூட வரவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை, காரணம், நாங்கள் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை. அதனால், நாங்கள் முதலீடு செய்த பணம் வரவில்லை என்றாலும் இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்போம், என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

 

அப்போது, படம் வெற்றிப் பெற்று உங்களுக்கு அதிகமான பணம் வந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி கேட்டதற்கு, “அதிக பணம் வந்தால், தமிழ் சினிமாவில் இருக்கும் திறமையான உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதத்தில் பல தரமான படங்களை தயாரிப்பேன்.” என்று பதில் அளித்தார்.

 

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் இந்த முடிவால் தமிழ்த் திரையுலக உதவி இயக்குநர்கள் பெரும் சந்தோஷமடைந்துள்ளார்கள்.

Related News

5112

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery