நடிகையுடன் காதல்! - யோகி பாபுக்கு விரைவில் திருமணம்
Friday June-21 2019

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, தற்போது ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். அவர் ஹீரோவாக நடித்திருக்கும் ‘கூர்கா’ மற்றும் ‘தர்மபிரபு’ ஆகியப் படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார்.

 

இதற்கிடையே, யோகி பாபுவுக்கு திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரது பெற்றோர் தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள். 

 

இந்த நிலையில், யோகி பாபு நடிகை ரேஷ்மா என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. ‘வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மா, சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

 

யோகி பாபுவும், ரேஷ்மா காதலிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இது வெறும் கிசு கிசு தான் என்று ரேஷ்மா பதில் அளித்திருந்தார். ஆனால், இது குறித்து மீண்டும் பேசியிருக்கும் ரேஷ்மா, ”எனக்கும் யோகி பாபுக்கும் இடையே காதல் இருப்பதாக கூறுவது தற்போது வரை கிசு கிசு தான். ஆனால், எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

 

Actress Reshma

 

ரேஷ்மாவின் இந்த சூசகமான பதில் அவர் யோகி பாபுவை காதலிப்பது உறுதிப்படுத்துவதாக தெரிகிறது. மேலும், யோகி பாபுவுக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் இருந்த வந்த தகவல்படி, திருமணத்திற்காக பெண் தேடி சலித்துப்போன பாபு, ரேஷ்மாவை திருமணம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறுகிறார்கள்.

 

தற்போது, யோகி பாபுவும், ரேஷ்மாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கும் நிலையில், அவர்களுக்கு திருமண ஏற்பாடும் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

எது எப்படியோ, ரேஷ்மா சொன்னது போல யோகி பாபுவும் இது குறித்து விளக்கம் அளித்தால் தான், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

Related News

5113

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery