தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சிலருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. நயன்தாரா, அஞ்சலி உள்ளிட்ட சில முன்னணி நடிகைகளுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, தமிழ் மற்றும் தெலுக்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினா கசாண்ட்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சென்னையை சேர்ந்த ரெஜினா ‘கண்டநாள் முதல்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றவருக்கு அங்கு அடித்தது ஜாக்பாட். அவர் நடித்த படங்கள் தொடர் வெற்றி பெற்றதால் தெலுங்கு சினிமாவில் முன்னணின் நடிகையானார்.
’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் மூலம் மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரிக்கொடுத்தவர் இந்த தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கியதோடு, தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது ‘பார்ட்டி’ படத்தில் நடித்து முடித்திருப்பவர், சிம்பு தேவன் இயக்கும் ‘கசட தபற’ படத்தில் நடித்து வருவதோடு, பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில், நடிகை ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரகசியமாக நடந்த இந்த திருமண நிச்சயதார்தத்தில் அவரது குடும்பத்தார் மட்டுமே கலந்துக் கொண்டார்களாம்.
தற்போது கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு திருமணம் செய்துக் கொள்ள முடிவு எடுத்திருக்கும் ரெஜினா, திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போடவும் முடிவு செய்துள்ளாராம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...