Latest News :

வடிவேலுக்காக 100 வெளிநாட்டு அழகிகளை இறக்கிய லைகா நிறுவனம்!
Sunday September-10 2017

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’படத்தின் இரண்டாம் பாகம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம், லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இயக்குகிறார்.

 

இதில் வடிவேலுக்கு ஜோடியாக பில்லா 2-வில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் பிரம்மாண்ட செட்டுகள் போடப்பட்டு அதில் சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு பாடலை அதே செட்டில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

பிரம்மாண்டமான முறையில் காட்சிப்படுத்த உள்ள இந்த பாடலுக்காக வெளிநாட்டில் இருந்து 100 அழகிகளை, இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இறக்கியுள்ளதாம். அந்த 100 அழகிகளும் வடிவேலுவுடன் சேர்ந்து நடனம் ஆட உள்ளார்கள். நிச்சயம் இந்த பாடல் படத்தின் ஹைலட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் எதிர்ப்பார்க்கின்றனர்.

Related News

512

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery