இந்திய அளவில் விஜய் செய்த புதிய சாதனை! - மாஸ் காட்டிய ரசிகர்கள்
Saturday June-22 2019

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து விஜயின் 63 வது படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நேற்று மாலை 6 மணிக்கும், நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிடப்பட்டது.

 

‘பிகில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பா, மகன் என விஜய் இரண்டு கெட்டப்புகளில் இருப்பது போன்ற போஸ்டர் பெரும் வைரலாகி வருகிறது.

 

இந்த நிலையில், இதுவரை இந்தியாவில் எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை விஜய் செய்துள்ளார். ஆம், விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழகம், கேரளா, ஸ்ரீலங்கா, மலேசியாவில் ஆகிய நாடுகளில் விஜயின் ‘கில்லி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட பல படங்கள் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

 

இந்த சிறப்பு காட்சிகள் மட்டுமே 200 தாண்டுகின்றதாம். இதுவரை இந்தியாவிலேயே பிறந்தநாளுக்கு ஒரு நடிகருக்கு இத்தனை ஷோக்கள் போடுவது இதுவே முதல் முறையாம்.

 

இப்படி தொட்டதில் எல்லாம் சாதனை புரியும் விஜயின் படங்கள் என்றாலே தமிழ்கத்தை தாண்டி இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5120

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery