சீரியல்களில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமை! - மனம் திறந்த விஜய் டிவி நடிகை
Saturday June-22 2019

சினிமாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் பல நடிகைகள் பேட்டியில் கூறி வருகிறார்கள். முன்னணி நடிகைகள் முதல் சிறிய வேடங்களில் நடிக்கும் நடிகைகள் வரை இதுபோன்ற புகார்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது சீரியல்களிலும் நடிகைகளுக்கு எதிராக பல கொடுமைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில், சீரியல்களில் தமிழ் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமை குறித்து விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் மனம் திறந்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர்களில் ஒன்றாகும். இதில், முல்லை என்ற ரோலில் நடிக்கும் சித்ரா என்பவர் மக்களை வெகுவாக கவர்ந்ததோடு, தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தையே கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சித்ரா, சீரியல்களில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமை குறித்து மிக கோபமாக பேசியிருக்கிறார்.

 

அதாவது, பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல், கேரளா, கர்நாடக என வேறு மாநில பெண்களுக்கு தான் வாய்ப்புகள் கொடுக்கிறார்களாம். அதற்கு காரணம், அவர்கள் வெள்ளையாக இருப்பதாக கூறுகிறார்களாம்.

 

“நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதேனே, நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்குறாங்கனு தெரியல” என்று கோபமாக கேள்வி எழுப்பியிருக்கும் சித்ராவின் இந்த பேட்டியால் சின்னத்திரை ஏரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாம்.

Related News

5121

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery