‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இதனால், தனது மற்றப் படங்களை நிறுத்தி வைத்துவிட்டு, பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
‘கடைக்குட்டி சிங்கம்’ குடும்ப ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைத்த இயக்குநர் பாண்டியராஜ், சிவகார்த்திகேயனை வைத்து அண்ணன், தங்கை செண்டிமெண்ட் கதையை படமாக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் அண்ணனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படத்திற்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று தலைப்பு வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை தலைப்பின் உரிமை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் உள்ளதால், அந்த தலைப்பை பெற அந்நிறுவனத்திடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
ஏற்கனவே, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்காக அந்த தலைப்பு கேட்கப்பட்ட போது, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்க மறுத்துவிட்ட நிலையில், சிவகார்த்திகேயனுக்கு கொடுக்குமா அல்லது மறுக்குமா, என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதே அமயம், எம்.ஜி.ஆரின் படங்களில் ரசிகர்களை கவர்ந்த படங்களில் மிக முக்கியமான படமாக கருதப்படும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்ற தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஏற்பார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...