நடிகர் சங்க தேர்தல் தொடங்கியது! - ஆர்வமாக வாக்களித்த பிரபலங்கள்
Sunday June-23 2019

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பலவிதமான பரபரப்பு சம்பவங்கள் அறங்கேறிய நிலையில், இன்று வாக்குப் பதிவு சென்னையில் தொடங்கியுள்ளது.

 

நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான பாண்டவர் அணியும், பாண்டவர் அணியில் இருந்து பிரிந்து சென்ற ஐசரி கணேஷ், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

 

நடிகர் சங்க தேர்தலில் ஆளூம் அதிமுக அரசின் ஆதிக்கம் இருப்பதாக விஷால் தரப்பினர் குற்றம் சாட்டிய நிலையில், தேர்தலுக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், வாக்கை உடனே எண்ணக்கூடாது என்று உத்தரவிட்டது.

 

அதன்படி, இன்று காலை 7 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது.

 

Nadigar Sangam Election

 

பிரபலங்கள் பலர் ஆர்வமாக ஓட்டு போட்டு வந்தாலும், தேர்தல் நடக்காது என்று அறிவித்ததுடன், தேர்தல் நடக்கும் இடத்தை நேற்று தான் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருப்பதால், பலர் தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற குழப்பத்தில் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

Related News

5125

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery