தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாசர், விஷால், கார்த்தி ஆகியோரது தலைமையிலான பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ், கே.பாக்யராஜ் ஆகியோரின் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
பழம்பெரும் நடிகைகள் கே.ஆர்.விஜயா உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பலர் தங்களை வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை காரணம் காட்டி, தன்னால் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், உண்மையில் அவர் இந்த தேர்தலை புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இன்று (ஜூன் 23) நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதுடன், அன்றைய தினத்தில் படப்பிடிப்புகள் எதுவும் வைக்க கூடாது என்றும் நடிகர் சங்கம், பிற சங்கங்களை கேட்டுக்கொண்டது.
அப்படி இருக்க, ரஜினிகாந்த் படப்பிடிப்பை காரணம் காட்டி நடிகர் சங்க தேர்தலை புறக்கணித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை, என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிகர் சங்க தேர்தலை புறக்கணித்ததற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் எஸ்.வி.சேகர், தானும் தேர்தலை புறக்கணித்துவிட்டேன், என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் லைக் போட்டுள்ளார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...