தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வரும் தமன்னா, தற்போது இரண்டு தமிழ் படங்களிலும், இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன், சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் முக்கியமான வேடத்தில் தமன்னா நடிக்கிறார்.
இந்த நிலையில், ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் தமன்னா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் பரவ தொடங்கியதும், ரசிகர்கள் பலர் தமன்னாவுக்கு வில்லி வேடம் செட்டாகாது, எதற்காக அவருக்கு இந்த வீண் வேலை, என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கினார்கள்.
இது குறித்து தமன்னா காதுக்கு தகவல் போக, பதறியவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நான் வில்லியாக நடிக்கவில்லை. அப்படி நடிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
எப்போதும் திருமணம் பற்றி வதந்திகள் வந்துக்கொண்டிருக்க, தற்போது தனது சினிமா வாழ்க்கைக்கே பிரச்சினை வரக்கூடிய ஒரு வதந்தி எப்படி பரவியதோ, இதை யார் வெளியிடுகிறார்களோ, என்று தனது நெருக்கமானவர்களிடம் தமன்னா புலம்பி வருகிறாராம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...