மாணவியின் விண்வெளி கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி!
Sunday June-23 2019

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருவதோடு, ஏழை மாணவர்களின் படிப்பு செலவு மற்றும் பல்வேறு துறைகளில் சாதிக்க துடிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் உதவி செய்து வருகிறார்.

 

அந்த வகையில், இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றும் விதத்தில் அவருக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பண உதவி செய்திருக்கிறார்.

 

தேனி மாவட்டம், அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். தனது ஏர் கிராப்ட் மெயிண்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரை-கார்கிவில் உள்ள நேஷ்னல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார். (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% 'A " கிரேடு) 

 

வரும் 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் இஸ்ரோ சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவரது லட்சியம்.

 

தற்போது போலந்து நாட்டில் உள்ள விண்வெளி ‘Analog austronaut training centre’ என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிக் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் என இப்பயிற்சிக்கு ரூ.8 லட்சத்திற்கு மேல் செலவாகிறது.

 

இந்த நிலையில், மாணவியின் பயிற்சி மற்றும் அதற்கு தேவைப்படும் தொகை குறித்து அறிந்த நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகர் மன்றத்தின் சார்பாக வழங்கியுள்ளார்.

 

Vijay Sethupathi fans

 

தற்போது படப்பிடிப்பில் இருப்பதால், போனில் தொடர்பு கொண்டு உதயகீர்த்தனாவை வாழ்த்திய விஜய் சேதுபதி, தொகையை தனது ரசிகர் மன்ற தலைமை செயலாளர் குமரன் மற்றும் தேனி நகர தலைவர் விக்னேஷ் ஆகியோர் மூலம் வழங்கியுள்ளார்.

Related News

5129

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery