Latest News :

நீதிமன்றத்தில் ஆஜராக சுந்தர்.சிக்கு நோட்டீஸ்!
Sunday September-10 2017

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நந்தினி’ தொலைக்காட்சி தொடரை, சன் டிவி யுடன் இணைந்து இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தயாரித்து வருகிறார். திரைப்பட இயக்குநர் ராஜ்கபூர் இயக்குகிறார். திரைப்படம் போல மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொடரில் விஜயகுமார், குஷ்பூ உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

 

இதற்கிடையே, இந்த தொடரின் கதை தன்னுடையது என்றும், தன்னிடம் இருந்து இயக்குநர் சுந்தர்.சி திருடி விட்டதாக இயக்குநரும் நடிகருமான வேல்முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்த வேல்முருகன், ”நந்தினி கதையை சுந்தர்.சி யிடம் நான் கூறிய போது, இதை தானே தயாரிப்பதாகவும், கதைக்கான பணத்தை கொடுத்துவிடுவதாகவும் கூறினார். ஆனால், தற்போது டைடில் கார்டில் என்னுடைய கதை என்றும் போடவில்லை, எனக்கு தருவதாக சொன்ன பணத்தையும் கொடுக்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்.” என்று கூறியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுந்தர்.சி யை விமர்சித்து குரல் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வேல்முருகன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இயக்குநர் சுந்தர்.சி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும், என்று உத்தரவிட்டுள்ளார்.

Related News

513

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery