இரண்டாவது திருமணம்! - மனம் திறந்த நடிகர் பார்த்திபன்
Monday June-24 2019

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவராக உள்ள பார்த்திபன், தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு பயணிப்பவர். அவர் இயக்கும் படங்கள், பேசும் வசனங்கள் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் வித்தியாசத்தை கடைபிடித்து வருகிறார்.

 

தற்போது, ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற தலைப்பில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுவதும் வருவது போன்ற வித்தியாசமான படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகை சீதாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் பார்த்திபன் பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

 

சீதாவை பிரிந்த பிறகு ஏன் இரண்டாவது திருமணம் செய்யவில்லை? என்று அவரிடம் கேட்டதற்கு, “கண்டிப்பாக என் இரண்டு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது, அடுத்து என் மகன் இருக்கிறார், அவர் திருமணம் முடிந்ததும் என் திருமணம் தான்.” என்று விளையாட்டாக பதில் அளித்தார்.

 

மேலும், தற்போது தனக்கு இனி திருமணம் வேண்டாம், என்று கூறியவர், வாழ்க்கையில் ஒரு நல்ல பார்ட்னர் இருந்தால் போதும், என்றும் கூறினார்.

Related News

5133

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery