Latest News :

ஐடியா கேட்கும் போலீஸ் - பிஸி என்று பிகு பண்ணும் விஷால்!
Sunday September-10 2017

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவையின் நிர்வாகியாக திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விஷால், கடந்த மூன்று நாட்களாக ‘துப்பறிவாளன்’ ஆக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

 

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகும் டிடெக்டிவ் படமாகவும், பாடல்கள் இல்லாமல் உருவாகும் மாஸ் ஹீரோ படம் உள்ளிட்ட பல சிறப்புகளோடு உருவாகியுள்ளது. செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியானதும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

 

இன்று சரியாக 3 மணியளவில் வெளியான ‘துப்பறிவாளன்’ டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, சமூக வலைதளங்கள் அனைத்திலும் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

 

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு வெளியாகியிருக்கும் இந்த டிரைலரில் போலீஸ் அதிகாரிகள் சிலர், விஷாலிடம் ஒரு வழக்கு குறுத்து சந்தேகம் கேட்க, அதற்கு அவர் “நான் ரொம்ப பிஸி’ என்று கூறி பிகு பண்ணுவது போன்ற காட்சி வைக்கப்பட்டுள்ளது. இப்படி போலீஸே ஐடியா கேட்கும் அளவுக்கு அதிபுத்திசாலி டிடேக்டிவாக நடித்துள்ள விஷால், இப்படத்தில் தனது நடிப்பு மற்றும் பாடி லேங்குவேஜ் உள்ளிட்டவையை முற்றிலும் மாற்றி நடித்துள்ளாராம்.

 

விஷாலுடன் பிரசன்னா, ஆண்டிரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் வினய் மற்றும் பாக்யராஜ் வில்லன்களாக நடித்துள்ளனர்.

 

டிரைலரை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் : Thupparivaalan Trailer

Related News

514

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery