தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி, வருடத்திற்கு இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்து விடுகிறார். இதனால் இவரது படங்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சிந்துபாத்’ ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படம் அறிவித்த நாளில் வெளியாகமல் போனது. காரணம், தயாரிப்பாளரின் பழைய கடன் தான். பிறகு பேச்சுவார்த்தை நடத்தி, கொடுப்பதை கொடுத்து பிரச்சினையை முடித்த படக்குழு, படத்தை வரும் ஜூன் 28 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.
ஆனால், இதற்கு நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே வெளியாக வேண்டிய படங்கள் இருக்கும் போது விஜய் சேதுபதியின் சிந்துபாத் திடீரென்று ரிலீஸ் தேதியை மாற்றியதால் தங்களது படங்களுக்கு பிரச்சினை எழுந்துள்ளதாகவும், போதிய திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் படம் அறிவித்தது போல ஜூன் 28 ஆம் தேதியும் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரச்சினையை தீர்க்க விஜய் சேதுபதி ரூ.1 கோடி கொடுத்தாலும், தயாரிப்பாளரின் பழைய கணக்கு தீரவில்லையாம். இதனால் படத்தை 28 ஆம் தேதியும் வெளியிட விடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதல் முறையாக நடித்திருப்பதாலும், ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த அருண்குமார் இயக்கியிருப்பதாலும், படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த விஜய் சேதுபதி, தனது பணத்தை கொடுத்து கணக்கை செட்டில் செய்து வெளியீட்டிற்கு உதவினாலும், பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதால் செக கடுப்பில் இருக்கிறாராம்.
இந்த படம் மட்டும் அல்ல, விஜய் சேதுபதியின் ஒவ்வொரு படமும் ரிலீஸின் போது இப்படி தான் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறது. தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் வாங்கிய பழைய கடனால், தனது படங்கள் பாதிக்கப்படுவதாலும், அதை சரிக்கட்ட கோடி கோடியாக கொடுத்தாலும், பிரச்சினை மட்டும் தொடர்ந்துக் கொண்டே இருப்பதால் விஜய் சேதுபதி ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...