ரசிகர்கள் வேண்டாம், படத்தின் புரோமோஷனில் பங்கேற்க மாட்டேன், இருந்தாலும் என் படம் ஜெயிக்கும் என்று ஓவர் கான்பிடண்டின் இருந்த அஜித்துக்கும், அஜித் போன்ற பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்துவிட்டால் போதும் படம் தன்னால் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த தயாரிப்பாளர்களுக்கும் ‘விவேகம்’ பெரிய பாடம் கற்பித்துள்ளது.
எந்த அளவுக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, அதை விடவும் மிக்கபெரிய தோல்வியை சந்தித்த ‘விவேகம்’ படத்தால், கோடம்பாக்கத்து முன்னணி ஹீரோக்களும், தயாரிப்பு நிறுவனங்களும் சரியான பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றனர்.
இப்போது சேதி இதுவல்ல, அதாவது விவேகம் தோல்வியால் பட்ட காயத்தின் ரனம் ஆறுவதற்கு முன்பாக அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கோடம்பாக்கத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்த அஜித்துக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட சில காயங்களினால் வலி அதிகரித்ததால், உடனடியாக ஆபரேஷன் செய்ய மருத்துவர்கள் அறிவுத்தினார்கள். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் எழுந்து நடக்ககூடிய அளவுக்கு அஜித் தயாராகி விட்டார்.
இதனால், அவர் தனது அடுத்த படத்தின் வேலையில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தை அஜித் டிராப் செய்துள்ளார். அதாவது மூன்று மாதத்திற்கு அஜித் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ள மாட்டார். தற்போது அவர் குறைந்தது மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களது அறிவுரைக்கு கட்டுப்பட்ட அஜித், இப்போதைக்கு அடுத்த படம் இல்லை, என்று கூறிவிட்டாராம்.
ஆக, 3 மாதங்கள் ஓய்வில் இருக்கும் அஜித் மூன்று மாதங்களுக்கு பிறகே தனது அடுத்த படம் குறித்தும், அதை இயக்கும் இயக்குநர் குறித்தும் யோசிக்க உள்ளாராம்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...