பருவ மழை சரியாக பெய்யாததால் தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிலும் சென்னை தான் இந்த தண்ணீர் பஞ்சத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் தண்ணீர் பிரச்சினை குறித்து பலர் பேசி வரும் நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் டி.காப்ரியோவும் சென்னை தண்ணீர் பிரச்சினை குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
‘டைடானிக்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் டி-காப்ரியோ ஹாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பதோடு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.
தற்போது, சினிமாவை தவிர்த்து பூமியின் கால மாற்றம், தண்ணீர் பஞ்சம் குறித்து அதிகமாக பேசி வரும் டி-காப்ரியோ சென்னையின் தண்ணீர் பஞ்சம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், தற்போது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், ஹோட்டல் எல்லாம் மூடப்பட்டுள்ளது. மழை மட்டுமே காப்பாற்ற வேண்டும், என டி-காப்ரியோ தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டி-காப்ரியோவின் இந்த பதிவு பலராலும் ஷேர் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...