குழந்தை இறப்பு, விவாகரத்து! - பிக் பாஸ் ரேஷ்மா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
Wednesday June-26 2019

சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற வேடத்தில் நடித்து பிரபலமான இவருக்கும், யோகி பாபுவுக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்கிறார்.

 

தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ”வாழ்க்கையில் மறக்க முடியாத சோகமான சம்பவம்” குறித்து சொல்லும்படி ரேஷ்மாவுக்கு டாஸ்க் கொடுக்க, அதை பாத்திமா பாபு வாசிக்கிறார்.

 

உடனே கண் கலங்கிய ரேஷ்மா, தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை சொல்ல சொல்ல, ஒட்டு மொத்த பிக் பாஸ் வீடே கண்ணீரில் தத்தளித்து சோகமாகிவிட்டது.

 

Big Boss Season 3

 

அதாவது, ரேஷ்மாவுக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனதோடு, 9 மாதம் அவர் கர்ப்பமாக இருந்தபோதே குழந்தை இறந்துவிட்டதாம். இதுவரை வெளியே தெரியாத இந்த விஷயத்தை ரேஷ்மா முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் கூறியிருக்கிறார்.

 

தற்போது புரோமோவாக இது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று இரவு ரேஷ்மாவின் வாழ்க்கை நடந்த சோகம் விஜய் டிவிக்கு பெரிய டி.ஆர்.பி யை தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

Related News

5152

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery