விஜய் சேதுபதிக்கு நேர்ந்த சோகம்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Thursday June-27 2019

விஜய் சேதுபதி படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றாலும், அவரது படங்களின் ரிலீஸின் போது எழும் பிரச்சினைகளும் தொடர் கதையாகி வருகிறது.

 

விஜய் சேதுபதியின் ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், அப்படத்தின் தயாரிப்பாளர்களால் பிரச்சினை ஏற்பட்டு படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று வெளியாக இருந்த ‘சிந்துபாந்த்’ படமும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கனவே அறிவித்த தேதியில் சிந்துபாத் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதால், விஜய் சேதுபதி மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டு பிறகு வேறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (ஜூன் 27) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், பிரச்சினை தீராததால், படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது, என்று தகவல் வெளியானது.

 

ஆனால், படக்குழுவினரோ படம் நிச்சயம் வெளியாகும் என்று கூறி வந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு திரையரங்கத்திற்கு சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சிந்துபாத் 8 மணி காட்சி வெளியாகவில்லை. இதன் பிறகு 12 மணி காட்சி வெளியாகுமா அல்லது படம் இன்று வெளியாகமலே போய்விடுமா என்பதில் பெரும் குழப்பம் நிலவிவருகிறது.

 

இப்படி தொடர்ந்து தனது படங்களுக்கு வரும் பிரச்சினையால் விஜய் சேதுபதி சோகமடைந்திருக்க, அவரது ரசிகர்களோ அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

Related News

5154

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery