ரஜினிகாந்த் படத்திற்கு வந்த சிக்கல்!
Thursday June-27 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது. இதற்கிடையே, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’ படத்தை சீனாவில் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளீயிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்திய மொழித் திரைப்படங்கள் சீனாவில் மிகப்பெரிய அளவில் வசூலித்து வரும் நிலையில், சீனாவில் வெளியாகும் முதல் ரஜினி படம் என்பதால் ‘2.0’ படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.

 

இந்த நிலையில், சீனாவில் ‘2.0’ படத்தை வெளியிட இருந்த நிறுவனம் தற்போது பின் வாங்குவதாக கூறப்படுகிறது. அந்நிறுவனம் வெளியிட்ட ‘பேட்மேன்’ அங்கு மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் அந்த நிறுவனத்திற்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாம். அதை ஈடு செய்ய வேண்டுமானால், அவர்கள் அடுத்ததாக வெளியிட இருக்கும்’2.0’ 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்ய வேண்டுமாம்.

 

2.0

 

மேலும், ரஜினியின் ‘2.0’ படம் வெளியாகும் சமயத்தில் தான் ஹாலிவுட் படமான ‘தி லயன் கிங்’ படமும் வெளியாக உள்ளதால், 2.0 படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

 

இதனால், ரஜினியின் ‘2.0’ சீனாவில் தற்போது வெளியாகாது என்று கூறப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளார்களாம்.

Related News

5156

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery