விஜய்க்கு ’ஐ லவ் யூ’ சொன்ன அஜித் பட நடிகை!
Thursday June-27 2019

விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் பொதுமக்களில் பல ரசிகர்கள் இருப்பது போல திரையுலக பிரபலங்களும் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக இளம் நடிகைகள் பலர் இவர்களது ரசிகர்களாக இருப்பதை பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள்.

 

அந்த வகையில், அஜித் படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் விஜய்க்கு ஐ லவ் யூ சொல்லியிருப்பது வைரலாகி வருகிறது.

 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கிய முதல் நாளே சண்டை, ரொமான்ஸ் என்று பரபரப்பை ஏற்படுத்த, நேற்றைய எப்பிசோட்டில் நடிகை ரேஷ்மா வாழ்வில் நடந்த சோக கதை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

இதையடுத்து, போட்டியாளர்களை குஷிப்படுத்த விஜய் பாடல் ஒன்று ஒலிபரப்பு செய்யப்பட, அதற்கு போட்டியார்கள் அனைவரும் நடனம் ஆடி கொண்டாடினார்கள். அப்போது நடிகர் அபிராமி மட்டும் ”ஐ லவ் யூ விஜய்” என கத்தினார்.

 

பிறகு மாலையில், கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் “உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் எது? என்று கேட்டதற்கு, “எனக்கு அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அவருடன் நடித்த முதல் நாள் தான் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்” என்று அபிராமி பதில் அளித்தார்.

 

Big Boss Abirami

 

இப்படி அஜித் மற்றும் விஜய் என இருவர் பற்றியும் நேற்று பிக் பாஸ் வீட்டில் பேசப்பட்டதால், இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

 

அபிராமி அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5158

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery