Latest News :

இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! - மணப்பெண் டாக்டராம்
Saturday June-29 2019

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். அஜித்தின் ‘கிரீடம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விஜய், விஜயை வைத்து ‘தலைவா’, விக்ரமை வைத்து ‘தெய்வ திருமகள்’, ‘தாண்டவம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

 

இதற்கிடையே நடிகை அமலா பாலை காதலித்த விஜய், கடந்த 20145 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை அமலா நிறுத்திக் கொண்ட நிலையில் திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே, அதாவது 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்கள்.

 

Director Vijay and Amala Paul

 

விவாகரத்துக்குப் பிறகு நடிகை அமலா பால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், இயக்குநர் விஜயுடம் தொடர்ந்து பல படங்களை இயக்கி வரும் நிலையில், அவர் இயக்கிய ‘கரு’ படத்தில் நடித்த சாய் பல்லவியுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

 

மேலும், இயக்குநர் விஜய் சாய் பல்லவியை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாக, இரண்டாவது திருமணம் குறித்து இயக்குநர் விஜய் மறுப்பு தெரிவித்தார்.

 

இந்த நிலையில், இயக்குநர் விஜய் தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் மணக்க இருக்கும் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா. சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான இவர், எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர். பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

 

இயக்குநர் விஜய் - டாக்டர் ஐஸ்வர்யா திருமணம் வரும் ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. 

Related News

5165

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery