ஆரம்பத்தில் சிறு சிறு படங்களில் ஹீரோயினாக நடித்த அமலா பால், அப்போதே சர்ச்சையான படத்தில் நடித்து பிரபலமானர். பிறகு ‘மைனா’ படம் மூலம் மக்களுக்கு அறியப்பட்டவர், அதன் பிறகு படி படியாக உயர்ந்து முன்னணி நடிகையாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களது திருமண வாழ்க்கை இரண்டு வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. ஆம், 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இவர்கள், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.
விவாகரத்துக்குப் பிறகு நடிப்பில் தீவிரம் காட்டிய அமலா பால், கவர்ச்சியிலும் தாராளம் காட்டி தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடிக்க முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில், அமலா பாலின் முன்னாள் கணவரான இயக்குநர் விஜய்க்கு அடுத்த மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா என்ற சென்னையை சேர்ந்த மருத்துவரை அவர் மணக்க இருக்கிறார்.
இந்த தகவல் நேற்று வெளியாகி வைரலான நிலையில், அமலா பால் திடீரென்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், தான் நடித்து வரும் ’ஆடை’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததோடு, ”நான் சண்டை போடுவேன். வாழ்வேன். பெரியதோ, சிறியதோ தடைகள் வரட்டும். நான் ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை பொடிப்பொடியாக்கி, ஊதித் தள்ளுவேன். எனது வலிமையை தான் நான் நம்புகிறேன். சுதந்திரமும், சந்தோஷமும் தான் முக்கியம். உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் தோற்க மாட்டீர்கள். இது தான் நான். இது தான் எனது 'ஆடை'யின் கதை” என ஆக்ரோஷமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அமலா பாலின் இந்த பதிவு ‘ஆடை’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீட்டுக்கானதாக இருந்தாலும், அவர் மறைமுகமாக விஜயின் இரண்டாவது திருமணம் பற்றி கருத்து தெரிவித்துள்ளதோடு, “சுதந்திரமும், சந்தோஷமும் தான் முக்கியம்” என்று குறிப்பிட்டு இயக்குநர் விஜயை பிரிந்ததற்கான காரணத்தையும் சூசகமாக கூறியுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...