சமீபகாலமாக தமிழக அரசியல் குறித்து ட்விட்டரில் கருத்து கூறி வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது பொது நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் அரசியல் குறித்து பேசி வருவதோடு, தனது ரசிகர்களை அரசியலில் ஈடுபடுமாறும் கூறி வருகிறார். இதனால் கமல் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் கமல்ஹாசன், திமுக-வுக்கு ஆதரவாக செயல்படுவதாக, அதிமுக அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், கமல்ஹாசன் எந்த அரசியல் கட்சியில் இணையப் போகிறார், என்பது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ஆருடம் கூறியுள்ளார்.
அதாவது, கோழிக்கோட்டில் நடக்க உள்ள மார்க்கசிஸ்ட் கட்சியின் செமினார் ஒன்றில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். அந்த தகவலை அடிப்படையாக வைத்து, கமல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போவதாக சுப்பிரஅனியன் சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.
”பாம்பஸ் இடியட்” என கமலை திட்டி, அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைவதாக கேள்விப்பட்டேன், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...