தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய் மற்றும் அஜித் இருவருமே வசூல் மன்னர்களாகவும் திகழ்கிறார்கள். விஜயின் ஒவ்வொரு படங்களும் வசூல் ரீதியாக மட்டும் இன்றி, டிஜிட்டல் தளத்திலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மேலும், ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ படங்களுக்குப் பிறகு தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் விஜய் படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படமும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல், அஜித்தும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதால், அவரது அடுத்த ரிலீஸான ‘நேர்கொண்ட பார்வை’ படம் மீது பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு போலீஸ் வேடமா அல்லது அரசியல்வாதி வேடமா என்பதிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அஜித் மற்றும் விஜய் இருவரது அடுத்தப் படங்களை இயக்குவதில் வெவ்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டாலும், தற்போது ஒரே இயக்குநரின் பெயர் அடிபட தொடங்கியுள்ளது.
ஆம், பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் விஜயின் அடுத்தப் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதோடு, அஜித்தை வைத்தும் ஷங்கர் படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இரண்டு மாஸ் ஹீரோக்களின் புதுப்படங்களில் இயக்குநர் ஷங்கரின் பெயர் அடிபடுவதால் அவரது ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...