ஜாங்கிரி மதுமிதாவுக்கு நேர்ந்த சோகம்! - பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்
Tuesday July-02 2019

பிக் பாஸ் சீசன் 3 யின் எலிமினேசன் ரவுண்ட் தொடங்கிவிட்டது. இதனால், யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பரபரப்பை அதிகரித்து வருகிறது.

 

இந்த நிலையில், காமெடி நடிகை மதுமிதாவை சக போட்டியாளர்கள் அனைவரும் ஒதுக்கி வைத்துள்ளனர். காரணம், அவர் தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியது மற்ற போட்டியாளர்களுக்கு அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவர் பெயரி பல போட்டியாளர்கள் நாமினேஷனில் குறிப்பிட்டுள்ளனர்.

 

இப்படி தன்னிடம் இருந்து அனைவரும் ஒதுங்கியிருப்பதால், தனியாக இருக்கும் மதுமிதா, சிறிய சிவலிங்கம் ஒன்றை வைத்துக் கொண்டு அழுதவாறு தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

 

பிக் பாஸ் முதல் சீசன்ன் ஓவியாவுக்கு எப்படி ஒரு நிலை ஏற்பட்டதோடு அதுபோல தற்போது மதுமிதாவுக்கும் ஏற்பட்டுள்ளது. அவர் மனநிலையில் மாற்றமும் தெரிகிறது.

 

சிவலிங்கத்துடன் பேசும் மதுமிதா, “இன்னைக்கு நீ என் கனவுல வரியா? எதாவது ஒரு விஷயம் எனக்கு தெரியணும். நீ தப்புனு சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். சரினு சொன்னாலும் ஏத்துக்குவேன். என் மனசுல கல்லை தூக்கி வைத்தது போல வெயிட்டாக இருக்கு. வீட்ல பிரச்சனைனா பரவால.. இங்கே எனக்கு வீடே பிரச்சனையா இருக்கு" என்று அழுதுக்கொண்டே தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

 

மதுமிதாவின் இந்த நிலைமை ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருப்பதோடு, பிக் பாஸ் குழுவினரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதனால், நிலைமை மோசமானால் மதுமிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.

Related News

5176

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery