கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நகர்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது. இதில் பல போட்டியாளர்கள் தங்களது சோகமான சம்பவங்களை கூறி, மற்றவர்களையும் கண் கலங்க வைத்துவிட்டார்கள்.
மேலும், காதல், மோதல் என்று விறுவிறுப்பாக கடந்த வாரத்தை கடந்த பிக் பாஸில் தற்போது வெளியேற்றுதளுக்கான எலிமேனேஷன் சுற்று தொடங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் சேரன், லொஸ்லியாவை வெளியேற்றுவதற்காக அவரது பெயரை பரிந்துரைத்தார்.
பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே ரசிகர்களின் பேவரைட்டான லொஸ்லியா, சேரனை அப்பா என்று அன்போடு அழைத்து வந்த நிலையில், அவர் லொஸ்லியாவை வெளியேற்ற நினைத்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.
இந்த நிலையில், லொஸ்லியாவை தான் ஏன் வெளியேற்ற நினைத்தேன், என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கும் சேரன், “தர்ஷன் மற்றும் லொஸ்லியா இருவரும், அழகான குழந்தைகளாக எந்த அப்பழுக்கும் இல்லாமல், போலி தோற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த முகங்களுக்கு நடுவில் அவர்கள் இருக்க வேண்டாம். அதனால் அவர்கள் வீட்டில் வேண்டாம் என நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...