Latest News :

விஷால் காட்டிய மாஸ் - பின்வாங்கிய சரத்குமார்!
Sunday September-10 2017

நடிகர் சங்க பொறுப்புகளில் பல ஆண்டுகளாக இருந்த சரத்குமார் மற்றும் அவரது அணியை கடந்த தேர்தலில் விஷால், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதற்கு பிறகு விஷால் மற்றும் சரத்குமார் இருவரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், விஷாலின் ‘துப்பறிவாளன்’ படம் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது. அதே சமயம், சரத்குமாரின் ‘சென்னையில் ஒரு நாள் 2’ படமும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு விஷாலும், சரத்குமாரும் தங்களது படங்கள் மூலம் மீண்டும் மோதிக்கொள்கிறார்கள், என்று பேசப்பட்டது.

 

ஆனால், விஷாலின் துப்பறிவாளன் படம் குறித்த பல தகவல்களின் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, படத்திற்கான புரோமோஷன் பணிகளில் துப்பறிவாளன் படக்குழு பம்பரமாக சுழன்று வருகிறது. அதே சமயம், இன்று 3 மணிக்கு வெளியான படத்தின் டிரைலர் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதத்தில் இருந்தது. மொத்தத்தில் விஷால் காட்டிய மாஸால், சரத்குமார் போட்டியில் இருந்து விலகும் வகையில், தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்.

 

இது குறித்து ‘சென்னையில் ஒரு நாள் 2’ படக்குழு கூறுகையில், “இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின்படி சென்னையில் ஒரு நாள் - 2’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கபடும்.” என்று தெரிவித்துள்ளனர்.


Related News

518

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery