இரண்டாவது முறையாக அதர்வாவுடன் இணையும் இயக்குநர் கண்ணன்!
Wednesday July-03 2019

‘பூமராங்’ வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கண்ணன், தனது அடுத்தப் படத்திலும் அதர்வாவுடன் இணைகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார்.

 

’இவன் தந்திரன்’ மற்றும் ‘பூமராங்’ படம் மூலம் வித்தியாசமான கதைக்களங்களை கையாண்ட இயக்குநர் கண்ணன், தற்போது குடும்ப உணர்வுகளை கொண்ட ஜாலியான காதல் படமாக இப்படத்தை உருவாக்க உள்ளார்.

 

இது குறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், “ஆம், பார்வையாளர்களுக்கு இடைவிடாமல் தீவிரமான மற்றும் சிக்கலான கதைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன, அதில் எனது படங்களும் அடங்கும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த மண்டலத்திலிருந்து விலகி ஒரு காதல் கதையை கொடுக்க விரும்பினேன். இதே எண்ணம் அதர்வா முரளிக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அழகான நடிகராக பாராட்டப்பட்ட அவரின்  கதாபாத்திரங்கள், பெரும்பாலும் தனித்துவமான மற்றும் சவாலானவையாகவே இருந்துள்ளன, எங்களின் கடைசி படமான 'பூமராங்' உட்பட. இருப்பினும், இந்த படம் அவரை ஒரு இளமையான கதாபாத்திரத்தில் சித்தரிக்கும். அவர் பிஎச்டி மாணவராக நடிக்கிறார்.

 

அனுபமா பரமேஸ்வரன் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக நடிக்கிறார். நாங்கள் உண்மையில் கண்களால் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகையை விரும்பினோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அதர்வா மற்றும் அனுபமா இருவரையும் ஒன்றாக ஒரு ஃபிரேமில் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இந்த படம் குடும்ப உணர்வுகளை கொண்ட ஒரு ஜாலியான படமாக இருக்கும்.” என்றார்.

 

96 படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். 

 

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் கண்ணன் தயாரிக்கு இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் தொடங்குவதுடன், பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது.

 

தற்போது படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்த முறையான அறிவுப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Related News

5192

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery