விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஜோதிகா!
Wednesday July-03 2019

பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜோதிகா ‘திருமலை’ மற்றும் ‘குஷி’ ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. பிறகு திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, விஜயின் ‘மெர்சல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு அப்படத்தில் இருந்து ஜோதிகா விலகியதால், அந்த வேடத்தில் நித்யா மேனன் நடித்தார்.

 

இந்த நிலையில், விஜய் படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை ஜோதிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

 

அதாவது, படத்தின் திரைக்கதை பற்றி ஜோதிகாவுக்கும், இயக்குநர் அட்லீக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். அதனால் தான் அவர் படத்தில் இருந்து விலகினாரே தவிர வேறு எதுவும் காரணம் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.

 

‘மெர்சல்’ படத்தில் ஜோதிகா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனனுக்கு பிலிம் பேர் விருது கிடைத்திருக்கும் நிலையில், அவ்விருதை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் ஜோதிகாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Related News

5194

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery