Latest News :

ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்ட சாஹோ பாடல் காட்சிகள்!
Thursday July-04 2019

அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படமான சாஹோ, அதன் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டு பாடல்கள் ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரூக் மற்றும் டிரோல் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டன. சுஜீத் இயக்கத்தில் பல மொழிகளில் உருவாகும் சாஹோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் மற்றும் நடன இயக்குனர் வைபவி மெர்ச்சண்ட் ஆகியோர் இன்ஸ்ப்ரூக்கிற்கு வந்தனர். இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், முரளி சர்மா, நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய், சங்கி பாண்டே மற்றும் மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இன்ஸ்ப்ரூக் மற்றும் டிரோல் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் படம் பிடிக்கப்பட்ட இந்த படத்தின் சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும்போது, இந்த பகுதிகள் எங்கள் ஆக்‌ஷன் த்ரில்லரின் காட்சிகளை மிகவும் அழகாக்கி இருப்பதாக தோன்றுகிறது.

 

படப்பிடிப்பு ஆரம்பத்தில் இன்ஸ்ப்ரூக்கின் ஆல்பைன் நகரத்தில் தொடங்கியது. இந்த நகரம் ஒரு மூச்சடைக்கக்கூடிய இயற்கை காட்சிகளையும், இம்பீரியல் சிட்டி சென்டரையும் அழகாக கலக்கிறது. இது தான் சாஹோவை ஹவுஸ் ஆஃப் மியூசிக், இன்ஸ்ப்ரூக் டிராம், கோஹ்தாயில் உள்ள ஃபின்ஸ்டெர்டல் அணை, அத்துடன் அட்லர்ஸ் ஹோட்டல் உள்ளிட்ட இன்ஸ்ப்ரூக்கின் சுற்று வட்டாரங்களில் படம் பிடிக்க எங்களை ஈர்த்தது. சில காட்சிகள் அருகிலுள்ள நகரமான சீஃபெல்டிலும் படமாக்கப்பட்டன. கூடுதலாக, ஸ்டூபயர் பனிப்பாறை மற்றும் சோல்டனில் உள்ள கெய்ஸ்லாச்சோகல் ஐஸ்க்யூவில் உள்ள 'டாப் ஆஃப் டிரோல்’ மலையில் ஒரு காதல் பாடலுக்காக படப்பிடிப்பு நடத்துவதற்கான பாக்கியமும், ஆதரவும் எங்களுக்கு கிடைத்தது. இது எங்கள் குழுவினருக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும். இந்த காதல் பாடலின் சில பகுதிகள் ரியூட்டில் உள்ள ஹைலைன் சஸ்பென்ஷன் பிரிட்ஜில் படமாக்கப்பட்டது.

 

அடுத்து வரவிருக்கும் எங்களின் பாடலுக்காக சில காட்சிகளை ரெட் புல்'ஸ் ஹங்கர் 7ல் உள்ள சால்ஸ்பர்க் விமான நிலையத்தில் படமாக்கினோம். ரெட் புல் ஃபிளையிங் ஸ்டெப்ஸில் இருந்து வந்த திறமையான நடனக் கலைஞர்களுடன், காட்சிகள் உண்மையிலேயே கண்ணாடி குவிமாடத்திற்குள் மிக அழகாக வந்துள்ளன. அதன் பிறகு குழுவினர் ஆஸ்திரியா படப்பிடிப்பின் நிறைவை கொண்டாடினர்.

 

"டிரோலில் படப்பிடிப்பு என்பது எனக்கு கிடைத்த மிக அற்புதமான அனுபவங்களில் ஒன்றாகும்" என்று நடிகர் பிரபாஸ் கூறினார்.

 

"ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு இடங்கள் மிகவும் அற்புதமானவை. அங்கு எங்கள் திரைப்படத்திற்கான சில பிரமாதமான காட்சிகளை நாங்கள் படம்பிடிக்க முடிந்தது" என்றார் சாஹோ தயாரிப்பாளர் பிரமோத் உப்பலபதி.

 

இன்ஸ்ப்ரூக் டூரிஸம், சினி டிரோல், லொகேஷன் ஆஸ்திரியா மற்றும் FISA ஆகியோர் அளித்த ஆதரவுக்கு யு.வி கிரியேஷன்ஸ் நன்றி தெரிவிக்கிறது.

 

எங்கள் சேவை தயாரிப்பாளர்களான இஷ்விந்தர் மத் தலைமையிலான ராபின்வில்லெ இன்டெக் மற்றும் டாக்டர் உர்சுலா கெப்ளிங்கர்-ஃபோர்ச்சர் தலைமையிலான கிரியேட்டிவ் கிரியேச்சர்ஸ் ஆகியோர் படப்பிடிப்பு மிகவும் தொழில்ரீதியாக நடத்தப்படுவதை உறுதி செய்தது மட்டுமல்லாமல், படப்பிடிப்பு அனுபவத்தை ஒட்டுமொத்த குழுவினருக்கும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றினர். அவர்களை எங்கள் பார்ட்னராக கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் அடுத்த தயாரிப்புக்காக மிக விரைவில் ஆஸ்திரியாவுக்கு வர, நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.

 

ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரூக் மற்றும் டிரோல் பிராந்தியத்தில் படப்பிடிப்பு என்பது எனக்கு கிடைத்த மிகவும் நம்பமுடியாத அற்புதமான அனுபவங்களில் ஒன்றாகும். ஸ்ரத்தா கபூர், வைபவி மெர்ச்சண்ட் மற்றும் இஷ்விந்தர் மத்க்கு நன்றி.

Related News

5199

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery