மலையாள சினிமாவில் ஆண் ஆதிக்கம் அதிகம் என்று பல நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நடிகை பாவனாவும் அதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கடத்தி கற்பழிக்கப்பட்ட பாவனா, தைரியமாக அச்சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் தெரிவித்ததோடு, வழக்கு விசாரணைக்கு முழு ஒத்தழைப்பையும் கொடுத்து வருகிறார். இதனால் பாவனாவின் தைரியத்தை மலையாள நடிகைகள் பலர் பாராட்டி வருகிறார்கள்.
பாவனா வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவரது நெருங்கிய உறவினரான தயாரிப்பாளர் ஒருவரும் விரைவில் கைதாக உள்ளார்.
இந்த நிலயில், மீண்டும் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கியுள்ள பாவனா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு சுதந்திரமும் இல்லை, மதிப்பும் இல்லை, என்று கூறியுள்ளார். மலையாள சினிமா முழுக்க முழுக்க ஆண்களை முன்வைத்தே இயங்குவதாகவும், நடிகைகள் எப்போதும் 2 ஆம் நிலைதான், என்றும் கூறியுள்ளார்.
ஆணாதிக்கம் நிறைந்த மலையாள சினிமாவில், திரைப்படம் விற்பனை முதல் அனைத்தும் கதாநாயகர்களை முன் வைத்தே நடக்கிறது. எந்த நடிக்கைக்காகவும் யாரும் படத்தை போட்டிபோட்டு வாங்குவது கிடையாது, சம்பளத்தையும் உயர்த்தி தர மாட்டார்கள், என்று கூறிய பாவனா, பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இறங்கிச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் பட வாய்ப்புக்காக யாரிடமும் இதுவரை கெஞ்சியது இல்லை.
சினிமா துறையில் பல இடையூறுகள் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இந்த துறைக்கு வரவேண்டும். சினிமாவில் நடைபெறும் சில அசம்பாவிதங்களை பார்த்து பெண்கள் வீட்டிலேயே முடங்கிவிடக்கூடாது. பெண்களுக்காக மலையாள திரையுலகில் தனி சங்கமே உள்ளதால் அவர்களுக்காக அந்த சங்கம் போராடும்.
எனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சில சம்பவங்களில் இருந்து நான் மீண்டு வருவதற்கு எனது ரசிகர்கள் அளித்த மனவலிமையும், எனது குடும்பத்தினர் கொடுத்த மன தைரியமும் பெரிதும் உதவியது. எந்த சோதனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் எனக்கு இருக்கிறது. எனவே என்னை யாராலும் வீழ்த்த முடியாது, என்றும் கூறியுள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...