Latest News :

வனிதாவின் மகள் அளித்த வாக்கு மூலம்! - பிக் பாஸில் தொடரும் பரபரப்பு
Thursday July-04 2019

கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் மூன்றாவது சீசனின் கலந்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களில் நடிகை வனிதா விஜயகுமாரும் ஒருவர். தனது அதிரடியால் போட்டியை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் வனிதாவால், நேற்றில் இருந்து பிக் பாஸ் வீடே பெரும் பதற்றத்துடனும், பயத்துடனும் காணப்படுகிறது.

 

குழந்தை கடத்தல் தொடர்பாக ஐதராபாத் காவல் நிலையத்தில் வனிதா மீது அவரது இரண்டாவது கணவர் புகார் கொடுக்க, தெலுங்கான போலீசார், பிக் பாஸ் வீட்டை முற்றுகையிட்டு வனிதாவை கைது செய்ய முடிவி செய்துவிட்டனர். இந்த தகவல் நேற்று காலை வெளியானதில் இருந்தே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

 

பிக் பாஸ் வீட்டில் நுழைந்து வனிதா கைது செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்யவில்லை.

 

இந்த நிலையில், வனிதா கடத்தப்பட்டதாக கூறப்படும் அவரது மகள் ஜோவித்தாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

 

Vanitha Daughter

 

அதில், ”நான் என் விருப்பமாக தான் அம்மா உடன் சென்றேன். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அம்மாவிற்கு போன் செய்து  தன்னை அழைத்து செல்லுங்கள் என்றேன். அம்மாவும் ஒரு காரில் வந்தார். அங்கிருந்து நேராக கோவை சென்றோம். அங்கு ஒரு ஓட்டலில் தங்கி இருந்தோம். பின்னர் எங்கள் உறவினர் ராகவி அத்தை வீட்டில் தங்கி இருந்தோம். அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதால் தற்போது. நானும் என் அக்காவும் மற்றொரு அபார்ட்மெண்டில் தங்கி இருக்கோம்..எங்களை பார்த்துக்கொள்ள வேலை ஆட்கள் இருகாங்க.. அத்தையும் இருக்காங்க. என் அப்பா உடன் வசிப்பது எனக்கு பிடிக்கவில்லை. எப்போதும் அப்பாவின் நண்பர்கள்  வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுள் ஒரு சிலர் பெயர் மட்டுமே எனக்கு தெரியும். எனவே நான் என் அம்மா உடன் இருக்க விருப்பபடுகிறேன்.” என்று ஜோவிதா தெரிவித்துள்ளார்.

 

ஜோவிதாவின் இந்த வாக்கு மூலம் தான் வனிதாவை கைதில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இது தொடர்பாக விரிவாக பேசுகிறேன், என்று கூறியிருக்கும் வனிதா, போலீஸ் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளாராம்.

Related News

5202

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

வெஸ்டர்ன் பாடலாக இருந்தாலும் அதில் மெலோடி இருந்தால் தான் ஹிட் ஆகும் - இசையமைப்பாளர் சபேஷ்
Thursday August-07 2025

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...

Recent Gallery