”எங்களை கைவிட்டு விடாதீர்கள்” - தயாரிப்பாளர்களிடம் கெஞ்சிய அபிராமி ராமநாதன்
Thursday July-04 2019

அறிவியல் முன்னேற்றம் மற்றும் பெருகி வரும் இணையத்தள சேவைகள் மூலம் பல்வேறு துறைகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், சினிமாத் துறையிலும் டிஜிட்டலின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கில் மட்டுமே பார்க்க முடியும், என்ற நிலை தற்போது மாறி, வெவ்வேறு வழிகளில் திரைப்படங்களைப் பார்க்கும் வசதி பெருகி வருகிறது.

 

மேலும், திரைப்படங்கள் வெளியான சில நாட்களில் அல்லது சில வாரங்களில் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறத். சில நூறுகள் கட்டணம் செலுத்திவிட்டு படம் பார்க்கும் வசதிகளும், இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்து வருவதால், தற்போது தியேட்டருக்கு செல்பவரின் கூட்டமும் குறையத் தொடங்கியுள்ளது.

 

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு திரைப்படங்களை கொடுப்பதில் சில கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும், என்று சென்னை அபிராமி திரையரங்கின் உரிமையாளரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான அபிராமி ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘பெளவ் பெளவ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அபிராமி ராமநாதன், “முன்பெல்லாம் தொலைக்காட்சிகள் சினிமா துறைக்கு சவாலாக அமைந்தது. தற்போது செல்போன்கள் அதைவிடவும் சவாலாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விடுவதால், தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது. டிஜிட்டல் நிறுவனங்களுக்கு படங்களை விற்க வேண்டாம், என்று சொல்லவில்லை. படம் வெளியாகி மூன்று மாதத்திற்குப் பிறகு கொடுங்கள், உடனே கொடுப்பதால் திரையரங்கங்கள் பாதிக்கப்படுகிறது.

 

பல கோடிகளை செலவிட்டு நீங்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்களை சிறிய திரையில் பார்த்தால் மக்கள் எப்படி ரசிப்பார்கள், திரையரங்கில் பார்த்தால் தான் ரசிப்பார்கள். அது தான் அந்த படத்திற்கும் கெளரவம். எங்களாலும் தொழில் செய்ய முடியும். இன்று சினிமா வளர்ந்ததற்கு காரணமே திரையரங்கங்கள் தான், அப்படி இருக்க அந்த திரையரங்குகளை தயாரிப்பாளர்கள் தற்போது மறந்துவிட்டு டிஜிட்டல் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிக்கிறது.

 

திரையரங்கங்கள் உங்களது மனைவி போல, டிஜிட்டல் நிறுவனங்கள் என்பது வப்பாட்டி போல. வப்பாட்டியிடும் போங்க, எப்போவாவது போங்க, ஆனால், மனைவி தான் எப்போதும் முக்கியம். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களை கைவிட்டு விடாதீர்கள்.” என்று கெஞ்சம் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

5205

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery