சினிமாவில் நடிகைகள் பாலியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதி அதிகரித்து வருதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தொலைக்காட்சிகளிலும் இதுபோன்ற பாலியல் வன்முறைகள் நடைபெறுவதாக சமீபத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பிரபல கன்னட நடிகர் தேஜஸ் கவுடா டிவி நடிகை ஒருவரை கற்பழித்த குற்றத்திற்காக போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் சிக்கபல்லபூர் பகுதி காவல் நிலையத்தில் நடிகர் தேஜஸ் கவுடாவுக்கு எதிராக கற்பழிப்பு புகார் அளித்துள்ள டிவி நடிகை, புகாரில், ”நானும் தேஜஸ் கவுடாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். நண்பர்களாக பின்னர் காதலர்களாக ஆனோம். 2012 ஆம் ஆண்டு தேஜஸ் என்னை ஆசை வார்த்தைக் கூறி கற்பழித்தார். பிறகு திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பல முறை என்னுடன் உறவு கொண்டார்.
இருவரும் டிவியில் நடிக்க தொடங்கினோம். 2018 ஆம் ஆண்டு நான் கர்ப்பமடைந்தவுடன் அதை கலைத்துவிடும்படி தேஜஸ் கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகர் தேஜஸ் கவுடாவுக்கும் வேறூ ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இதை அறிந்த அந்த டிவி நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸாரும் நடிகையின் புகாரின் அடிப்படையில் நடிகர் தேஜஸை கைது செய்துள்ளனர்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...