Latest News :

தீயணைப்பு வீரர்களின் பாராட்டு மழையில் ‘நெருப்புடா’
Monday September-11 2017

தமிழ் சினிமாவில் தீயணைப்புத் துறை மற்றும் தீயணைப்பு வீரர் வேடத்தில் ஹீரோ நடிப்பது என்பது ரொம்பவே அதிரான ஒன்று தான். தங்களது உயிரிழை துச்சமாக நினைத்து மற்றவர்களின் உயிரை காப்பாற்றும் பணியை மேற்கொள்ளுபவர்களின் சாதனைகளையும், அவர்களது பணியை பாராட்டும் விதத்திலும் உருவாகியுள்ள படம் தான் ‘நெருப்புடா’.

 

ஆக்‌ஷன் காதல் கலந்த கமர்ஷியல் படமாக இருந்தாலும், அதன் பின்னணியில் தீயணைப்பு வீரர்களின் தியாகங்கள் பற்றி சொல்லியிருக்கும் ’நெருப்புடா’ கடந்த வெள்ளிக்கிழமை (செப்.8) வெளியான படங்களிலேயே பெஸ்ட், என்ற பெயர் பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தை பார்க்கும் தீயணைப்பு வீரர்கள், படம் குறித்தும், ஹீரோ விக்ரம் பிரபு குறித்தும் பெரிதும் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது படக்குழுவினரை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.

 

சந்தோஷ் தேவா என்ற தீயணைப்பு வீரர் நெருப்புடா படத்தை பார்த்துவிட்டு பெரும் மகிழ்ச்சியடைந்ததோடு, படம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், வெற்றி கோப்பையுடன் தான் இருப்பது போன்ற புகைப்படத்தை போட்டு, “இந்த வெற்றியை விட நேற்று பார்த்த நெருப்புடா மகிழ்ச்சி அளித்தது. உங்கள் குழுவுக்கு கோடி நன்றிகள். சுயநலமாக சொல்வதாக நினைத்தாலும் பரவாயில்லை. இன்னும் பல வலிகள் உள்ளது எங்களுக்கு. அதை நெருப்புட இரண்டாம் பாகத்தில் காட்டுவிங்க என்று நம்பிக்கை உள்ளது. மீண்டும் கோடி வணக்கங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

சந்தோஷ் தேவா போல பல தீயணைப்பு வீரர்கள் மட்டும் இன்றி தமிழக ரசிகர்கள் அனைவரும் நெருப்புடா படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதற்கு காரணம், படத்தில் எந்த இடத்திலும் மது குடிப்பது போன்றோ அல்லது சிகரெட் புகைப்பது போன்றோ காட்சிகளை இல்லை என்பது தான்.

 

மொத்தத்தில், குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்கு காதலை நேர்மையாகவும், ஆக்‌ஷனை அளவாகவும் கையாளப்பட்டிருக்கும் நெருப்புடா-வை பார்க்கும் மக்கள் படம் சிறப்புடா, என்றே சொல்கிறார்கள்.

Related News

521

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery