சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், நடிகைகள் பலர் சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதை ஒப்புக்கொள்வதோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வெளிப்படையாக பேட்டியில் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், மலையாள சினிமாவின் பிரபல நடிகையாக இருக்கும் காயத்ரி சுரேஷ், ‘4ஜி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் தற்போது படப்பிடிபில் இருக்கிறது.
இந்த நிலையில், நடிகை காயத்ரி சுரேஷ் அளித்த சமீபத்திய பேட்டியில், படம் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, படுக்கைக்கு அழைப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய காயத்ரி சுரேஷ், ”என்னை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறினர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று கேட்டு செல்போனில் குறுந்தகவலும் அனுப்பினர். அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு நான் பதில் அளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கிவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.
மலையாள சினிமா நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மலையாள நடிகையான காயத்ரி சுரேஷ் கூறியிருக்கும் குற்றச்சாட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...