இன்று பிக் பாஸ் எலிமினேஷன்! - இவர் தான் அவுட்டாகப் போகிறாராம்
Saturday July-06 2019

பிக் பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. இதில் காதல், மோதல், திருமணம் மற்றும் விவாகரத்து ரகசிங்கள் என பல சுவாரஸ்யங்கள் அரங்கேறி வரும் நிலையில், மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் எலிமினேஷன் அரங்கேற்றம் இன்று நடைபெற உள்ளது.

 

போட்டி தொடங்கி முதல் எலிமினேஷன் இது என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பிக் பாஸ் கமல்ஹாசன், இன்று அறிவிப்பார்.

 

எலிமினேஷனில் பாத்திமா பாபு, சேரன், கவின், சாக்‌ஷி, மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும், வீட்டில் இருந்து அவுட்டாக இருப்பவர் பாத்திமா பாபு தான் என்று கூறப்படுகிறது.

 

பிக் பாஸ் போட்டியை பொருத்தவரை, நிகழ்ச்சியில் சர்ச்சையாக பேசி, பரபரப்பை யார் ஏற்படுத்துகிறார்களோ அவர்கள் தான் ஹீரோ. அவர்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு. அது மட்டும் அல்ல, மக்களிடம் கெட்டப் பெயர் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று பிக் பாஸ் வீட்டுக்குள் அடாவடித்தனம் செய்பவர்களுக்கும் ராஜ மரியாதை கிடைக்குமாம். மொத்தத்தில் நிகழ்ச்சி நடத்த கண்டெண்ட் தருபவர்கள் எளிதில் அவுட்டாக மாட்டார்கள்.

 

அந்த வகையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல், அமைதியாக இருப்பவர் பாத்திமா பாபு மட்டுமே. அதனால், பிக் பாஸ் அவரை தான் அவுட்டாக்கி வீட்டை விட்டு வெளியேற்றுவார் என்று கூறப்படுகிறது.

Related News

5218

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery