Latest News :

சிம்புக்கு விரைவில் திருமணம் - ஆந்திராவில் முகாமிட்டுள்ள டி.ஆர்!
Monday September-11 2017

நயந்தாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்குப் பிறகு ஹன்சிகாவை காதலித்த சிம்பு, அக்காதலிலும் தோல்வியடைந்ததால், திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். மேலும், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டும் சிம்பு, கடவுள் எபோது எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறாரோ அப்போது நடக்கும், என்று கூறி வருகிறார்.

 

ஆனால், அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் ஆர்வமாக உள்ளார்கள். இருந்தாலும், சிம்பு எந்த பெண்ணை தேர்வு செய்கிறாரோ அந்த பெண்ணை தான் திருமணம் செய்து வைப்போம், என்று அவரது தந்தை டி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

 

அதே சமயம், தனது மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளையும் டி.ராஜேந்திரன் செய்து வருகிறார். அதன்படி, ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக டி.ஆர் சிறப்பு பூஜை செய்தார்.

 

சிம்பு நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக சிம்பு ஒப்பந்தம் செய்யப்ப்ட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related News

522

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery