‘ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அமலா பால், அப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ”தனக்கு 15 கணவர்கள் இருந்தார்கள்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
’மேயாத மான்’ ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆடை’ படத்தை சுப்பு தயாரித்திருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியானதில் இருந்து படத்தின் டீசர் வரை அத்தனையும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதோடு, மக்களிடம் வரவேற்பு பெற்று எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை அமலா பால், “இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம் அவள் தியாகியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணாகவோ அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறான் என்ற கருத்தில் உடன்பாடில்லாமல் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ’ஆடை’ படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.
இருப்பினும், அந்த காட்சி எடுக்கும்போது மனதில் படபடப்பு ஒரு வித பயம் ஏற்பட்டது. உடனே கேரோவேனுக்கு சென்றுவிட்டேன். பிறகு இயக்குநர் குழு என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார்கள். அப்போது பாதுகாப்பு குறித்து எனக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், பலத்த பாதுகாப்போடு தான் அந்த காட்சியை எடுத்தார்கள். கேமரேமேன் உள்பட மொத்தமே 15 பேர் தான் அந்த இடத்தில் இருந்தார்கள். அனைவரிடம் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனைவரும் எனக்கு அண்ணன்கள் போல தான், அவர்கள் எனக்கு தக்க பாதுகாப்பாக இருந்தார்கள்.
அப்போது தான் எனக்கு தோன்றியது, பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தார்கள், ஆனால், எனக்கு 15 கணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று.
பல பேருக்கு தெரியாது ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர்.” என்று தெரிவித்தார்.
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...