அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட் குறித்தும், டீசர் மற்றும் டிரைலர் குறித்தும் ரசிகர்கல் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, இன்று மாலை படம் குறித்த அப்டேட் ஒன்று காத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி காலையிலேயே தகவல் கூறியதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதே சமயம், இந்த அப்டேட் டிரைலர் மற்றும் டீசர் குறித்தது இல்லை, என்றும் அவர் கூறியதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
இந்த நிலையில், படத்தில் இடம் பெறும் முக்கியமான பாடலான “வெறித்தனம்...” என்ற பாடலை விஜய் பாடப் போகிறார், என்பது தான் அந்த அப்டேட் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இப்பாடலுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்,
அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும்...